பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு துறையினர் ஆய்வு


பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு துறையினர் ஆய்வு
x

வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டாசு ஆலைகள்

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் விதிமீறல் மற்றும் மூலப்பொருட்களில் ஏற்படும் உராய்வின் காரணமாக அவ்வப்போது நிகழும் வெடி விபத்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட அளவில் பல்வேறு ஆய்வுக்குழுகளை கலெக்டர் நியமித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலைகளில் விதி மீறலை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிற்சாலைகளில் விதிகளை மீறி யாரேனும் தயாரிப்பில் ஈடுபடுகிறார்களா? அனுமதி பெறாத பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? பட்டாசு ஆலைகள் உள் குத்தகைக்கு விடப்படுகிறதா? போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை தென் மண்டல துணை இயக்குனர் விஜயக்குமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள், உதவி மாவட்ட அலுவலர்கள் உள்பட 50 பேரை உள்ளடக்கிய 10 குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது தமிழக அரசின் வழிகாட்டுதல் பேரில் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? பட்டாசு தயாரிப்பில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா? என பல்வேறு வழிகாட்டுதல்கள் குறித்தும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


Next Story