ஆயுதப்படையில் துப்பாக்கிகள் ஆய்வு


ஆயுதப்படையில் துப்பாக்கிகள் ஆய்வு
x

நாமக்கல்லில் ஆயுதப்படையில் துப்பாக்கிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு மீட்பு பணி நிலையங்கள் மற்றும் வனத்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள் ஆண்டுக்கு ஒருமுறை சென்னை சிறுபடைகலன் பிரிவு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் நேற்று நாமக்கல் ஆயுதப்படையில் துப்பாக்கிகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என சென்னை சிறுபடைகலன் பிரிவு அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ரிவால்வர், ஏ.கே.47, எஸ்.எல்.ஆர். இன்சாஸ் உள்பட 10 வகையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் போலீசாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 3-ல் ஒருபங்கு துப்பாக்கிகள் ஆய்வுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கண்ணீர் புகைகுண்டு வீசுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளையும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) துப்பாக்கிகள் ஆய்வு நடைபெற இருப்பதாக ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ தெரிவித்தார்.


Next Story