ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x

சேரன்மாதேவியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படியும், மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா ஆலோசனைப்படியும், சேரன்மாதேவி வட்டாரத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் பெர்னான்டோஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிக அளவில் வர்ணம் சேர்க்கப்பட்ட சிக்கன் இறைச்சிகளை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினார். குடிநீர் உற்பத்தி நிலையங்களில் ஆய்வு செய்து, மாதிரிகளை பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.


Next Story