பெரம்பலூரில் நகராட்சி ஆணையர் ஆய்வு
பெரம்பலூரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 16, 17-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது 17-வது நகர்மன்ற வார்டு உறுப்பினர் துரை காமராஜ் உடனிருந்தார். மேலும் வார்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Related Tags :
Next Story