திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
கீழ்பென்னாத்தூரில் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் உள்ள கால்நடை மருத்துவ நிலையம் அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கருங்காலி குப்பம், அம்பேத்கர் நகர், ராஜாதோப்பு, கொட்டாவூர் ஆகிய 4 இடங்களில ்குளம் மேம்பாட்டு பணிகள் ஆகிய திட்டப்பணிக்ள நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் மற்றும் உதவி செயற்பொறியாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்குமாறும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது நகர தி.மு.க. செயலாளர் அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், சேத்துப்பட்டு இளநிலை பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.