நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
x

குழுமூர் சாலையில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகாவில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி குழுமூர் சாலையில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 2 ஏக்கர் 91 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் விரைவில் நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அரியலூர் நீதிமன்றத்திற்கு ஆய்வு பணிக்கு வந்த மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு புதிய நீதிமன்றம் கட்டும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். செந்துறை மாவட்ட நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உடன் வந்தார். இவர்களுடன் வக்கீல்களும் வந்தனர். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்றம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தின் வரைபடங்கள் மற்றும் எல்லைகளை ஆய்வு செய்தார். நீதிமன்றத்திற்கு செல்லும் பாதைகள் மற்றும் குடியிருப்பு இடத்தையும் ஆய்வு செய்த பின்னர் விரைவில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story