பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
கச்சிராயப்பாளையம் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
கச்சிராயப்பாளையம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டாசு கடைகளில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசுகள் இருப்பு வைக்க மற்றும் கடைகள் வைக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்த கோட்டாட்சியர் விபத்துக்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது சின்னசேலம் தாசில்தார் இந்திரா, வடக்கநந்தல் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.