பிளஸ்-2 மாணவி வீட்டுக்கு உடனடி மின்சாரம்:கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை


பிளஸ்-2 மாணவி வீட்டுக்கு உடனடி மின்சாரம்:கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் மின்வசதியின்றி அவதிக்குள்ளான பிளஸ்-2 மாணவி வீட்டுக்கு உடனடி மின்சாரம் வழங்கி கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்தார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் பிளஸ்-2 மாணவி வீட்டில் மின்இணைப்பு இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதை அறிந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் நேற்று அந்த மாணவி வீட்டுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது.

பிளஸ்-2 மாணவி அவதி

சாத்தான்குளம் வீரஇடக்குடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. கணவரை இழந்த இவரது மகள் பேச்சித்தாய் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் ஜயப்பன் 5-ம் வகுப்பு படிக்கிறார். லட்சுமி முறுக்கு வியாபாரம் செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்இணைப்பு இல்லை. இதனால் இவரது மகளான பிளஸ்-2 மாணவி பேச்சித்தாய் தேர்வுக்கு படிக்க மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து வாட்ஸ் அப் குழுக்களில் ெசய்தி வைரலானது.

கலெக்டர் நடவடிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாணவி வீட்டுக்கு மின்இணைப்பு உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, உதவி மின் செயற்பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று லட்சுமி வீட்டை பார்வையிட்டு மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுத்தனர்.

மின்இணைப்பு கிடைத்தது

இதை தொடர்ந்து நேற்று மாலையில் திங்கள்கிழமை மாணவி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கிய கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு லட்சுமியும், அவரது மகளும் நன்றி ெதரிவித்து கொண்டனர்.


Next Story