இலவச வீட்டுமனை பட்டா கேட்டவர்களுக்கு உடனடி தீர்வு


இலவச வீட்டுமனை பட்டா கேட்டவர்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 25 May 2023 12:30 AM IST (Updated: 25 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஜமாபந்தியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.

திண்டுக்கல்

ஜமாபந்தி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி நடந்தது. அதன்படி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் தலைமையிலும், கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையிலும் ஜமாபந்தி நடந்தது. ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஜமாபந்தி நடந்தது.

ஜமாபந்தியில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்த 3 பேரின் மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.

8 கிராமங்களில்...

ஜமாபந்தியில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, உதவி இயக்குனர் (நில அளவை) சிவக்குமார், தனிதாசில்தார் சசி, துணை தாசில்தார்கள் ராமசாமி, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள கீரனூர், சின்னக்காம்பட்டி, வாடிப்பட்டி, எல்லப்பட்டி, அத்தம்பட்டி, மார்க்கம்பட்டி, குத்திலிப்பை ஆகிய 8 கிராமங்களிலும் நேற்று ஜமாபந்தி நடந்தது.

இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, துணை தாசில்தார் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் நரியூத்து, பச்சமலையான்கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கி நாயக்கன்பட்டி, நக்கலூத்து ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 160 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.


Related Tags :
Next Story