நெல் பயிரை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்


நெல் பயிரை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் வட்டார விவசாயிகள் தற்போது அதிகளவில் நெல் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நெல் பயிர் இயற்கை இடர்பாட்டால் பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க காப்பீடு செய்து கொள்ளலாம். நெல்லை காப்பீடு செய்ய ஆதார் அட்டை, நிலச்சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை காரிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story