பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரங்கள் கலெக்டர் வழங்கினார்
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
பயிர் காப்பீடு
சிவகங்கை மாவட்ட வேளாண்மை துறையின் சார்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், 2022-2023-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, காப்பீடு பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு காப்பீடு பத்திரங்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 60 ஆயிரத்து 109 விவசாயிகளால் 63 ஆயிரத்து 50.72 எக்ேடர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரங்கள்
இதில் முதற்கட்டமாக நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அவர்கள் காப்பீடு செய்துள்ள பயிர் மற்றும் அதன் பரப்பு, விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரீமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரீமியம் மானியத்தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விவரங்கள் அடங்கிய காப்பீடு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் காப்பீடு பத்திரங்களை நேரடியாக பெற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.