கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை பணி


கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை பணி
x

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள திண்டிவனம் ரோடு, திரவுபதி அம்மன் கோவில் தெரு உள்பட 15 வார்டுகளில் துப்புரவு பணியாளர்களை கொண்டு ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள், வியாபாரிகள் குப்பைகளை வீடு தேடி வரும் துப்புரவு பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் திரவுபதி அம்மன் கோவில் அருகில் ஒட்டுமொத்த தூய்மை பணிகளை துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். நிகழ்ச்சிகளில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story