திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்


திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

திண்டிவனம்-மரக்காணம் இடையே 2 வழிச்சாலை இருந்தது. இந்த வழித்தடத்தில் அதிக போக்குவரத்தின் காரணமாக 4 வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.296 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 3.8.2022 அன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவழிச்சாலையை விரிவுபடுத்தி 4 வழிச்சாலையாக அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மரங்கள் அகற்றம்

இதன் முதற்கட்டமாக சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. மேலும் மின்கம்பங்களும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், சிறுபாலங்களை பெரிய பாலங்களாக மாற்றி அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரிவுப் படுத்தப்பட்ட சில இடங்களில் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

20 சதவீத பணிகள் முடிவு

இந்த பணியை மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ், மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். 4 வழிச்சாலை அமைக்கும் பணியை 21 மாதங்களில் முடிக்க வேண்டும். தற்போது பணி தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story