பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்


பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி குமரி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மொத்தம் 806 உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்திலும் வருகை பதிவேடு, ேமஜை நாற்காலிகள் போன்றவை போடப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே அனைத்து பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் மேஜை மற்றும் நாற்காலிகளில் படிந்திருந்த தூசியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். தற்போது கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பள்ளி, மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நேற்று நடந்தது.


Next Story