கூடலூரில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் தீவிரம்


கூடலூரில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் தீவிரம்
x

கூடலூரில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழையை எதிர் கொள்வதற்கான பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் அம்ரித், துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையொட்டி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு பேரிடர் தடுப்பு மேலாண்மை முகாம் நடைபெற்றது.

ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் வருவாய், காவல், தீயணைப்பு, தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள், பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆர்.டி.ஓ. சரவணன் அனைத்து துறை அலுவலர்களுக்கும் விளக்கம் அளித்தார்.

ஆர்.டி.ஓ. ஆய்வு

பின்னர் காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலை உள்பட பல்வேறு துறைகளின் தளவாட உபகரண பொருட்களின் செயல்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார். பின்னர் உபகரணங்கள் நன்கு செயல்படும்படி இருக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆய்வின்போது தாசில்தார் சித்தராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story