திட்டச்சேரியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திட்டச்சேரியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திட்டச்சேரியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மழைநீர் வடிகால்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நாகப்பட்டினம்-நன்னிலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடுக்கடை-பனங்குடி இடையே சாலை முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திட்டச்சேரி காந்திசாலை, மெயின் ரோடு, கடைத்தெரு பகுதிகளில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வடிகால்கள் தூர்ந்து உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய முடியாத நிலை இருந்தது.

தூர்வாரும் பணி

இந்த மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 19-ந்தேதி படத்துடன் வெளிவந்தது.

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகாலை தூர்வார உத்தரவிட்டனர். அதன்பேரில் தொழிலாளர்கள், மழைநீர் வடிகாலை தூர்வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story