அருப்புக்கோட்டையில் சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரம்


அருப்புக்கோட்டையில் சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அருப்புக்கோட்டையில் சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் அருப்புக்கோட்டையில் சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை

அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையான மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பல்வேறு இடங்களிலும் 2 பக்கமும் சாலைகள் சுரண்டப்பட்டு காணப்பட்டது. சுரண்டப்பட்ட மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை புதிய சாலைகள் பல மாதங்களாக போடப்படாமல் கிடப்பில் கிடந்தது.

இச்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் சுரண்டப்பட்ட சாலையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் சில சமயங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

பராமரிப்பு பணி

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு சாலை பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக தற்போது புறவழிச்சாலையில் சுரண்டப்பட்ட பகுதிகளில் புதிய சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் சாலைகள் சேதமடைந்துள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story