சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்


சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்
x

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 36 மாடுகள், 38 கன்றுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட.ன

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 36 மாடுகள், 38 கன்றுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட.ன

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு பிரத்யேக வாகனம் மூலம் கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறையாக பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.3 ஆயிரமும், கன்று ஒன்றுக்கு ரூ.1500-ம் வசூலிக்கப்படும். 2-வது முறையாக அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம், கன்று ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். 3-வது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம்- மற்றும் கன்றுஒன்றுக்கு ரூ.2500-ம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில்இதுவரை 36 மாடுகள், 38 கன்றுகளை பிடித்து கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து மற்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் உள்ளிட்டவை கால்நடை காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடை காப்பகத்தில் பிடித்து பாதுகாக்கும் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளர் கால் நடை மருத்துவரை அணுகி கால்நடைக்கு உரிய சிகிச்சை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் 2 மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை தொடர்ந்து பிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story