தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்களை மாற்றும் பணி தீவிரம்


தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்களை மாற்றும் பணி தீவிரம்
x

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்களை மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

தேனி

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருந்தன. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 700 மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று பழனிசெட்டிபட்டி பகுதியில் இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. இந்த பணிகளை தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் தங்கபாண்டி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாவட்டம் முழுவதும் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதிக்குள் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 700 சேதம் அடைந்த மின்கம்பங்களையும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடக்கும் இடங்களில் மட்டும் பணிகள் நடக்கும் போது மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது" என்றனர். இதேபோல் கம்பத்தில் நடைபெற்ற சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியை மதுரை மண்டல முதன்மை பொறியாளர் உமாதேவி ஆய்வு செய்தார்.


Next Story