நெல் அறுவடை பணிகள் தீவிரம்


நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x

நீடாமங்கலம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

50 ஆயிரம் ஏக்கரில் விவசாய பணிகள்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சார்ந்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த ஆண்டு 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் மும்முரமாக நடந்தது.இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடை பணிகள்

நீடாமங்கலம் வட்டாரத்தில் நீடாமங்கலம், தேவங்குடி, கருவாக்குறிச்சி, வடுவூர் உள்ளிட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை விவசாயிகள் பெற்று பயன் அடைந்தனர். இந்தநிலையில் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்திற்கு உட்பட்ட பூவனூர், காளாச்சேரி, ஆதனூர், கோவில்வெண்ணி, சித்தமல்லி, பரப்பனாமேடு, முன்னாவல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பல்வேறு வகையான நெல் ரகங்களை விவசாயிகள் கோடை சாகுபடி செய்திருந்தனர். அந்த நெல் ரகங்கள் நன்கு வளர்ந்ததால் தற்போது எந்திரம் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story