நெல்லிக்குப்பம் பகுதியில்குளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்


நெல்லிக்குப்பம் பகுதியில்குளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்து போய் காணப்பட்டதால் மழைநீரை அதிக அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரக்கால்பட்டு குளத்தை சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள குளங்களையும் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


Next Story