வீதிவீதியாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்


வீதிவீதியாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
x

ஈராளச்சேரி ஊராட்சியில் வீதிவீதியாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட ஈராளச்சேரி ஈராளச்சேரி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் உதவியோடு கொசுமருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வீதிவீதியாக சென்று கழிவுநீர் தேங்கும் இடங்கள், அங்கன்வாடி மையம் மற்றும் இதர பகுதிகளில் மருந்துகளை தெளித்தனர்.

இந்த பணியை ஊராட்சிமன்ற தலைவர் திவ்யபாரதி தினேஷ், தனியார் நிறுவன உரிமையாளர் மதன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Next Story