தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்


தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
x

குன்னூரில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. அவை பஸ் நிலையம், மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி வருகின்றன. சில நேரங்களில் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பதால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து சாலையோரத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தனியார் அமைப்பு மூலம் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தற்போது சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டாக்டர் மோனிகா தடுப்பூசி செலுத்தி வருகிறார். மேலும் வளர்ப்பு நாய்களுக்கும் கட்டணமின்றி தடுப்பூசி போடப்படுகிறது.


Next Story