ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டு விழா
வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதனைதொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட பணியாளர்கள் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரை சாலை, கடற்கரைபகுதி, பேராலய பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவைகளை பொக்லின் எந்திரம் கொண்டு அகற்றினர்.
=====
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பொக்லின் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது எடுத்த படம்.