ஈரோட்டில் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
ஈரோடு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதும், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக புத்தகங்களை தயாராக வைத்திருக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான பாடப்புத்தகங்கள் ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடந்தது. ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கூடங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து சென்றார்கள்
Related Tags :
Next Story