தின்னரை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை
வேடசந்தூர் அருகே, தின்னரை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே உள்ள டொக்குவீரன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி. கொத்தனார். இவரது வீட்டில், பெயிண்டு அடிக்கும் வேலை நடந்து வருகிறது. இதனால் பெயிண்டு மற்றும் அதில் கலப்பதற்கான தின்னர் பாட்டில் ஆகியவை வீட்டருகே இருந்தன.
இந்தநிலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த வேலுச்சாமியின் 1½ வயது மகன் இலக்கியன், தண்ணீர் என நினைத்து தின்னரை எடுத்து குடித்து விட்டான். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி, தனது குழந்தையை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, இலக்கியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story