கல்லூரிகளுக்கு இடையேயான பல்துறை போட்டிகள்


கல்லூரிகளுக்கு இடையேயான பல்துறை போட்டிகள்
x

நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான பல்துறை போட்டிகள் நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான பல்துறை போட்டிகள் நடைபெற்றன. இதற்கு என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், மென்பொருள் சார்ந்த போட்டிகள், ரங்கோலி, ஆடை அலங்காரம், முகப்பூச்சு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளின் முடிவில் மதுரை தியாகராஜர் கல்லூரி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-ம் இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி பிடித்தது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, என்.பி.ஆர். கல்விக்குழும பதிவாளர் சின்னக்காளை வழங்கினார்.



Next Story