பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி


பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
x

பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான 12-ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தொடர் கிரிக்கெட் போட்டி திருச்சி சாரநாதன் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிபோட்டியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி அணி 48.2 ஓவர்களில் 281 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுவாடேஷ் 147 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கேம்பியன் பள்ளி அணி 43.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 161 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீரங்கம் பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேம்பியன் பள்ளி 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்தை ஆர்.எஸ்.கே. பள்ளியும், 4-வது இடத்தை ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி அணியும் பெற்றன.


Next Story