மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டி; பிஷப் தொடங்கி வைத்தார்


மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டி; பிஷப் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மண்டல கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நேற்று மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடந்தது. மாணவ-மாணவியரின் அறிவுத்திறனையும், மதிநுட்பத்தையும் வளர்க்கும் விதமாக தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஸ்நோ ஹாலில் நடந்த இந்த சதுரங்க போட்டியை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 45 பள்ளிகளைச் சார்ந்த 260 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட சதுரங்க கழகம் செயலாளர் கற்பக வள்ளி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், சின்னகோவில் பங்குத்தந்தை ரோலிங்டன், பனிமயமாதா பேராலய அதிபர் குமார் ராஜா, அருட்தந்தையர்கள் ரூபர்ட் அருள் வளவன், லிப்டன் மரியதாஸ், புனித அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயலர் ஜெயந்தன் உள்பட பலர் கலந்து கொண்டர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story