விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்கடன் வழங்கப்படுகிறது.
ஊட்டி, ஜூன்.8-
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்கடன் தொடர்பான வட்டாசியரின் அனுபோக சான்றிதழ், அடங்கல், போட்டோ ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு, மனுக்களை விண்ணப்பித்து பயிர்கடன் பெற்று பயனடையலாம். மேலும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், பிற்படுத்தப்பட்டடோர் கடன் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை விண்ணப்பித்து பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் (73387 21401), உதவி பொது மேலாளர் (9486978433), கடன் மேலாளர் (96555 91150) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.