செயல்படுத்தப்பட்ட சாலைப்பணிகள் குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு


செயல்படுத்தப்பட்ட சாலைப்பணிகள் குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சாலைப்பணிகள் குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, செங்கல்பட்டு நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து திருவண்ணாமலை வட்ட கட்டுமான பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் கடந்த 10-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

இக்குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 98 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் 2021-22 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட வாணாபுரம் மருத்துவமனை சாலை முதல் இடக்கை சாலை வரை என 3.6 கிலோ மீட்டர் வரை தரம் உயர்த்துதல் பணியை தள ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வேலூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர்கள் கே.ரகுராமன் (திருவண்ணாமலை), பிரகாஷ் (வேலூர்), செந்தில் (ஆரணி), நபார்டு கிராம சாலைகள் வேலூர் கோட்ட பொறியாளர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த தணிக்கை குழுவினர் தங்களுடைய ஆய்வினை நாளை மறுநாள் (புதன்கிழமை) முடித்துக்கொண்டு, அதன் அறிக்கையை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story