பன்னாட்டு சேவை சான்றிதழ்
விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவருக்கு பன்னாட்டு சேவை சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
பன்னாட்டு அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுனர் அலுவலக வருகை விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் காமதேனு அரிமா சங்கத்தின் நிர்வாகி இளங்கோவன் முன்னிலை வகித்தார். விழாவில் சங்கத்தின் மூத்த உறுப்பினரான விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகருக்கு பன்னாட்டு அரிமா சங்கங்களின் சார்பில் அவரது பன்னாட்டு சேவையை பாராட்டி பன்னாட்டு சான்றிதழை விழுப்புரம் மாவட்ட ஆளுனர் சிவக்குமார் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்டத்தின் முன்னாள் ஆளுனர் விஜயலட்சுமி சிவக்குமார், மாவட்ட அவை செயலாளர் திருமால், பொருளாளர் நடராஜன், மண்டல தலைவர் ராஜபிரகாஷ், வட்டார தலைவர் சுரேஷ், காமதேனு அரிமா சங்க நிர்வாகிகள் சாரங்கபாணி, ஜெயராமன், சடகோபன், வாசுதேவன், புருஷோத்தமன், ஆனந்தன், மோகனசீனிவாசன், பன்னீர்செல்வம், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஒரு பயனாளிக்கு சலவைப்பெட்டி, சங்கத்தின் சேவை திட்டத்தில் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காமதேனு அரிமா சங்க தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.