பஸ் டிரைவரிடம் விசாரணை


பஸ் டிரைவரிடம் விசாரணை
x

கோவில்பட்டியில் பள்ளி மாணவர் பலி: பஸ் டிரைவரிடம் விசாரணை

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (வயது 15). இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்த உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோவில்பட்டி மெயின்ரோடு நாற்கரச்சாலை கூடுதல் பஸ் நிலையம் எதிரில், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த சங்கனாபேரியைச் சேர்ந்த சண்முகம் மகன் இறையனன் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார்சைக்கிளும் மோதியதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தார்கள்.

இதில் ஸ்ரீபுஷ்பராஜை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததால், அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுபற்றி கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மேற்கு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் பள்ளி மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் 2 பேரும் கீழே விழுவதும், பள்ளி மாணவன் ஸ்ரீபுஷ்பராஜ் உடல் மீது தனியார் பஸ் பின்பக்க டயரில் மோதி ரோட்டில் கிடப்பதும் பதிவானது தெரியவந்தது.

இதுதொடர்பாக மேற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி பஸ் டிரைவர் கோவில்பட்டி தாமஸ்நகர் சண்முகம் மகன் சுந்தர்ராஜ் (62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story