விசாரணை கைதி சாவு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி இறந்தார்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பசும்பொன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ஆதிமூலகிருஷ்ணன் என்ற அய்யப்பன் (வயது 39). இவர் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென வலிப்புநோய் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story