ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இல்லை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி
கிருஷ்ணகிரி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 4 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க. உருவாக்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். யார் உங்களை உருவாக்க சொன்னது. அதனால் தான் ஜெயலலிதாவை விமர்சித்து அவர்கள் பேசுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார். நாட்டில் எண்ணற்ற திட்டங்களை தந்த ஜெயலலிதாவை விமர்சிக்கும் தகுதி அண்ணாமலைக்கு இல்லை.
பா.ஜ.க. மேல்மட்ட தலைவர்களை எப்போதும் மதிப்பவர் ஓ.பன்னீர்செல்வம். அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீது அவர் மரியாதை வைத்திருப்பவர். ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பேச்சால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசுகின்றனர். ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என ஏன் அறிவிக்கவில்லை?. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே ஜெயலலிதாவை லோக் நாயகி என குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரை அண்ணாமலையால் விமர்சிக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.