காலியாக உள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு


காலியாக உள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு
x

விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 600 பேர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச்சங்கங்களில் காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக காலை 8 மணிக்கே விண்ணப்பதாரர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் உரிய பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. முதல் நாளான நேற்று 600 பேர் கலந்து கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள்சேர்ப்பு தலைவருமான சி.பெ.முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை பதிவாளர்கள் பாலசுப்பிரமணியன், சுவாதி, சம்பத், செயலாட்சியர் தர்மேந்திரன், செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story