கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்


கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க குறைந்தபட்சம் ரூ.1½ லட்சம் முதல் ரூ.7½ லட்சம் வரை ஆதிதிராவிட மக்களுக்கு 30 சதவீதம், பழங்குடியின மக்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சுயதொழில் தொடங்க கடனுதவி கேட்டு 150-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், கடலூர் தாட்கோ மேலாளர் மணிமேகலை, கள்ளக்குறிச்சி தாட்கோ மேலாளர் ஆனந்தமோகன், டிக்கி குழு உறுப்பினர்கள் சுகாசினி, கால்நடை மருத்துவர்கள் அன்பு மலர் அசோக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர். நேர்காணலில் என்ன தொழில் செய்யப் போகிறார்கள் என்பதற்கான திட்ட அறிக்கை மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடன் தொகையின் மதிப்பீடு, தொழிலின் விவரம் மற்றும் உரிய சான்றுகளை ஆய்வு செய்தனர்.


Next Story