கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு;52 பேர் பங்கேற்பு
கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் 52 பேர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் 52 பேர் பங்கேற்றனர்.
தூய்மை பணியாளர்கள்
குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 10 தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த பணிக்கு 40 பெண்கள் உள்பட 52 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 52 பேரின் சான்றிதழை அதிகாரிகள் சரிபார்த்தனர். தூய்மை பணியாளர்களுக்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. என்றாலும் பட்டதாரிகளும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூய்மை பணியாளர்களுக்கான பணி விவரம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். அப்போது அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பட்டதாரி இளம்பெண் ஒருவர் தனக்கு இந்த பணி வேண்டாம் என கூறினார். பின்னர் அவர் கண் கலங்கியபடி தனது சான்றிதழுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனது உறவினருடன் வெளியேறினார். அந்த பெண் பி.எஸ்சி. படித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.