தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நேர்காணல்
கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நேர்காணல் கலெக்டர் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்காணல் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் விண்ணப்பம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீத மானியத்துடனும், பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கடனை பெற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் லாபகரமான சிறந்த தொழில்களை தேர்ந்தெடுத்து சிறந்த தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, தாட்கோ உதவி மேலாளர் மாயக்கண்ணன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.