தலையாரி பணிக்கு நேர்முக தேர்வு


தலையாரி பணிக்கு நேர்முக தேர்வு
x

நெல்லையில் தலையாரி பணிக்கு நேர்முக தேர்வு நடந்தது.

திருநெல்வேலி

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள தலையாரி (கிராம உதவியாளர்) பணிக்கான நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்ற தேவையான தலையாரிகள் பணிக்கான நேர்முக தேர்வு நெல்லை டவுனில் நேற்று தொடங்கியது.

இந்த நேர்முகத் தேர்வை நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்கள் இந்த நேர்முக தேர்வை நடத்தினார்கள். 100 பேர் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களிடம் தேர்வு குழுவினர் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஒவ்வொரு நாளும் 100 பேர் வீதம் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்கிறார்கள். இந்த தேர்வு 1 வாரம் நடக்கிறது.


Next Story