குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி போலீஸ் விசாரணை


குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால்  கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி  போலீஸ் விசாரணை
x

குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவி கல்லூரிக்கு சென்று வரும் போது, உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த பழனி மகன் சுதாகர் (வயது 26) என்பவர் மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியை வழிமறித்து, நீ குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் நான் சொல்வதைக் கேட்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


Next Story