ரெயில்களில் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்கும் வசதி அறிமுகம்


ரெயில்களில் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்கும் வசதி அறிமுகம்
x

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் அனுப்பும் பார்சல்களை கண்காணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

15 ரெயில் நிலையங்களில்...

விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள், விவசாய விளைபொருட்கள் மற்றும் வணிக பொருட்களை பெரிய நகரங்கள் மற்றும் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரெயில்வே பார்சல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பிற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது ரெயில்வே பார்சல் சேவை விரைவான, நம்பகமான, சிக்கனமான சேவையாக கருதப்படுகிறது. மதுரை ரெயில்வே கோட்டத்தில் தற்போது 15 ரெயில் நிலையங்களில் 24 மணி நேர பார்சல் சேவை வசதி உள்ளது.

இதற்கிடையே, பார்சல் முறையை எளிமையாக்க பார்சல் மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை ரெயில்வே கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராஜபாளையம் உள்ளிட்ட 4 முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கண்காணிக்கும் வசதி

மேலும் தூத்துக்குடி, விருதுநகர், ராமேசுவரம், பாம்பன், செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதாவது, மின்னணு எடை, கண்காணிப்பு வசதி மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட புக்கிங் கவுண்ட்டர்கள், சரக்குகளை தானாக அளவிடும் மின்னணு தராசுகள் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. அதன்படி, பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பார்சலுக்கும் 10 இலக்க பதிவெண் வழங்கப்படும்.

அதற்கு பார்கோடு உருவாக்கப்பட்டு, பார்சல் எங்குள்ளது என்ற தகவலை கண்காணிக்க முடியும். பார்சல்கள் மூலம் ரெயில்வேக்கு கணிசமான வருமானம் வந்து கொண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் பார்சல் போக்குவரத்து மூலம் மதுரை கோட்டத்துக்கு ரூ.10 கோடியே 97 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது.


Related Tags :
Next Story