ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ-ஆர் கோடு அறிமுகம்-கலெக்டர் அம்ரித் தகவல்


ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ-ஆர் கோடு அறிமுகம்-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்களை கண்காணிக்க கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்களை கண்காணிக்க கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

கியூ-ஆர் கோடு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 403 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ஊட்டி, குன்னூர். குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் செயல்பட்டு செயல்முறை கிடங்குகளில் இணைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் போதிய இடவசதி இல்லாததால் ஒவ்வொரு மாதமும் கிடங்கிலிருந்து நகர்வு செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதிலும் முதலில் பெறப்பட்ட அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதிலும் இடையூறு ஏற்படுகிறது.

கடும் நடவடிக்கை

இதனை தவிர்க்கும் விதமாக நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் புது முயற்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் துவரம் பருப்பு மூட்டைகளுக்கு கியூ- ஆர் கோடு குறியீடு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த கியூ -ஆர் கோடு குறியீட்டில் அத்தியாவசியப் பொருளின் பெயர். மாதம், எந்த கிடங்கிலிருந்து நகர்வு செய்யப்படுகிறது.

முன்நகர்வா அல்லது வழக்கமான நகர்வா என்ற விவரங்களை அச்சிடப்பட்டு ஒவ்வொரு மூட்டையிலும் தைக்கப்படுகின்றன. இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்கள் எந்த மாதத்திற்கானது என்ற விபரம் தெரியும். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், அதனை கடத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story