சாரயம் குறித்த புகார்கள் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிமுகம்
வேலூர் மாவட்டத்தில் சாரயம் குறித்த புகார்கள் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக வேலூர் மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சுதல், விற்பனை பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் பிரத்தியேகமாக 9445463494, 9498111155 என்ற வாட்ஸ் அப் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே சாராயம் காய்ச்சுதல், சாராய ஊறல், போலி மதுபானம், புதுச்சேரி மதுவிற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story