பா.ஜனதா நிர்வாகிகள் அறிமுக கூட்டம்


பா.ஜனதா நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
x

குலேசகரன்பட்டினத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி ஒன்றிய, நகரம் மற்றும் கிளைகளுக்கான புதிய பா.ஜனதா நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில இளைஞரணி செயலர் பூபதிப் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலர்கள் ரா.சிவமுருகன் ஆதித்தன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி ஒன்றிய பா.ஜனதா தலைவர் அழகேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பங்கேற்று பேசினாா். உடன்குடி ஒன்றிய பா.ஜனதா இளைஞரணி துணைத்தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.

மேலும், தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இளைஞர்களின் ஆரோக்கியத்தை வலுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா சார்பில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மின்வெட்டு பிரச்சினை காரணமாகவே தி.மு.க. ஆட்சியை இழந்தது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு ஏதும் இல்லை. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நிலவும் மின்வெட்டுக்கு ஊழல்தான் காரணம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழக மக்களிடம் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது. தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருகிறார்.

மகராஷ்டிரத்தை போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story