சித்த மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி


சித்த மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி
x

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் சித்த மருத்துவம் படிப்பதற்காக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான அறிமுக விழா நேற்று திருமூலர் கூட்டரங்கில் நடந்தது. முன்னதாக பெற்றோருடன் வந்த முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர் சாந்தமரியா முன்னிலையில் மூத்த மாணவ-மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பேராசிரியை மல்லிகா வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் சாந்தமரியா பேசுகையில், "சித்த மருத்துவம் படிக்க நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படிப்பு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நிகரானது. அந்த மாணவர்கள் கற்கும் படிப்பையும் சேர்த்து பயிலும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. சித்த மருத்துவம் படித்த பலர் உலக அளவில் சிறந்த சித்த மருத்துவ நிபுணர்களாகவும், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களாகவும் புகழ்பெற்றுள்ளனர். கொரோனா காலத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை உலகளவில் பிரபலமானது. சித்த மருத்துவத்தை மேம்படுத்த உலக அளவில் பல ஆராய்ச்சிகள் முன்வந்துள்ளன. எனவே சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை நீங்கள் மேற்கொண்டு உலக அளவில் புகழ் பெற வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோசப்தாஸ், துணை முதல்வர் சவுந்தரராஜன், உடற்கூறுத்தலைவர் வெங்கட்ராமன், டாக்டர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story