அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு


அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே சென்று அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் வந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story