புத்தக திருவிழாவுக்கான அழைப்பிதழ்
புத்தக திருவிழாவுக்கான அழைப்பிதழை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டார்
புதுக்கோட்டையில் நகர்மன்ற வளாகத்தில் 5-வது புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விழாவில் அமைச்சர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். தொடக்க விழா வருகிற 29-ந் தேதி காலை நடைபெற உள்ளது. விழாவுக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்குகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். ஒவ்வொரு நாள் மாலையிலும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான அழைப்பிதழை கலெக்டர் கவிதாராமு நேற்று வெளியிட்டார். அப்போது விழா ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.