நாகூர் தர்காவுக்கு அழைப்பிதழ்


நாகூர் தர்காவுக்கு அழைப்பிதழ்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: நாகூர் தர்காவுக்கு அழைப்பிதழ்

நாகப்பட்டினம்

நாகூர்:

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள தர்கா அலுவலகத்தில் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹமது காஜி ஹுசைன் சாஹிபிடம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா அழைப்பிதழை அளித்து, விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். பின்னர் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.


Next Story