இரும்பு தண்ணீர் தொட்டி திருட்டு


இரும்பு தண்ணீர் தொட்டி திருட்டு
x

இரும்பு தண்ணீர் தொட்டியை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (வயது 50). இவர் கட்டுமான காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். சாத்தூர்- இருக்கன்குடி ரோட்டில் கட்டுமான பணிகள் செய்து வருகிறார். கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பிலான வாட்டர் டேங்க் ஒன்றை அந்த பகுதியில் நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் சம்பவத் தன்று காலையில் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது அந்த வாட்டர் டேங்க் மற்றும் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த ஆயில் மோட்டார் ஆகியவற்றை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து காசிவிஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அம்மாபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story